மார்த்தாண்டத்தில் ரெயில் மோதி வியாபாரி சாவு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
மார்த்தாண்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி காய்கறி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
குழித்துறை,
மார்த்தாண்டம் நந்தன்காடு வாழபிலாவிளையை சேர்ந்தவர் ஜவாகிர் (வயது 32). இவருடைய நண்பர் பல்லன்விளையை சேர்ந்த ஜான் (45). இவர்கள் இருவரும் மார்த்தாண்டம் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். வியாபாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்க அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு ஜவாகிரும், ஜானும் மதுரை செல்வதற்காக மார்த்தாண்டத்தில் உள்ள குழித்துறை ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டனர். ரெயில் நிலையத்தையொட்டி தண்டவாளம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
பின்னர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ரெயில் இருவர் மீதும் மோதியது. இதில் நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் ஜவாகிர் பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த ஜான், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த ஜவாகிருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி காய்கறி வியாபாரி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.