பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க.வினர் நேற்று கடலூர் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
பெட்ரோல்–டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் சங்க துணை தலைவர் விஜயவர்மன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், மதி, மகாலிங்கம், விஜய் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
மாநில துணை பொதுச் செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், துணை தலைவர் சண்முகம், முன்னாள் துணை பொதுச் செயலாளர் தர்மலிங்கம், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர்கள் ரமேஷ், ராமமூர்த்தி, தொழிற்சங்க தலைவர் சிவ.ரமேஷ், தொண்டர் அணி தலைவர் விநாயகம், இளைஞர் சங்க தலைவர் வாட்டர் மணி, துணை தலைவர் தீபன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இளைஞர் சங்க நிர்வாகிகள் தாமோதரன், சந்தானம், விக்கி, ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.
விருத்தாசலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞரணி செயலாளர் செந்தில், மாநில மகளிர் அணி செயலாளர்கள் டாக்டர் தமிழரசி ஆதிமுலம், சிலம்பு செல்வி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர்.
இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடலூர் ரோட்டில் உள்ள பா.ம.க. கட்சி அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் பேரணியாக தாலுகா அலுவலகம் சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
பண்ருட்டியில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கடலூர் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் குபேரன் வரவேற்றார். மாநில மாணவரணி செயலாளர் கோபிநாத், மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் கணபதி, அமைப்பு செயலாளர் கயல்ராஜன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் எழிலரசி ரவிச்சந்திரன், நெய்வேலி தொகுதி அமைப்பாளர் வள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இருப்பினும், பா.ம.க.வினர் கொட்டு மழையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில துணைத்தலைவர் முத்து வைத்தியலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் கோ.ஜெகன், மாநில மாணவரணி செயலாளர் கோபிநாத், இளைஞரணி தலைவர் ராஜேந்திரன், இளைஞர் சங்க செயலாளர் பாலகுரு, ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், பிரேம்குமார், மாவட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், பன்னீர்செல்வம், குணசேகர், வேங்கை சேகர் மற்றும் தரணி, வீரமுத்து, உதயா, வினோத், கதிரவன், அருள்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பண்ருட்டி நகர செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.