5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
ஊட்டி,
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் முறையை ஒழித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தினகரன்(ஜாக்டோ) தலைமை தாங்கினார். ஆல்தொரை(ஜியோ), அரசு ஊழியர் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் முடிவின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து தினகரன் (ஜாக்டோ) கூறியதாவது:- ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், தற்போது வரை அரசு எங்களை அழைத்து பேச வில்லை. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். தமிழகத்தில் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறித்து, பணியிடங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதற்காக பணியாளர் பகுப்பாய்வுக் குழு அமைத்ததை கண்டிக்கிறோம். 5 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட அரசு முடிவு செய்து உள்ளது. தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று நடத்துவதோடு, பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும். வருகிற 13-ந் தேதி சேலத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆயத்த மாநாடு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 200 அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் ஆயிரத்து 500 பேர் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து உள்ளனர். பதிவுத்துறை, மருத்துவத்துறையில் பணிபுரிகிறவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. மேலும் மற்ற சங்கத்தை சார்ந்தவர்கள் விடுப்பு எடுக்கவில்லை. நீலகிரி மாவட்டத்தில் அரசு ஆசிரியர்கள் 700 பேர் விடுப்பு எடுத்து உள்ளனர் என்று தெரியவந்து உள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடி இருந்ததை காண முடிந்தது. இருப்பினும், புதியதாக பணியில் சேர்ந்தவர்கள், பணிக்காலத்தை நிறைவு செய்யாத ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகி ஜான்மனோகர் தலைமை தாங்கினார். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.