கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். 2017-ம் ஆண்டின் ஊதிய கமிஷனை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கிருஷ்ணகிரியில், தாலுகா அலுவலகம் முன்பு கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் தாலுகாவைச் சேர்ந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஒருநாள் தற்காலிக விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் வட்டாரத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர்கள் நந்தகுமார், நாராயணன், மாநில ஒருங்கிணைப்பாளர் தியோடர் ராபின்சன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தற்காலிக விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு நிர்வாகி திம்மப்பா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி, கோபால்சாமி, பாலாஜி, பிரான்சிஸ், நடராஜன், நாகராஜன், முருகேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது ஊதிய நிலுவை தொகையை அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள 10 ஆயிரத்து 680 பேர் நேற்று ஒரு நாள் தற்காலிக விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.