கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊழிய நிலுவை தொகையினை வழங்க வேண்டும். சிறப்பு கால முறை ஊதியம் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும். கணினி ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
5 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடுவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் வேலுமணி, குமரவேல், மாநில துணைத்தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் கரூர் மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.