மூதாட்டியிடம் 6 பவுன் நகை அபேஸ்

தூத்துக்குடி அருகே மூதாட்டியிடம் 6 பவுன் நகையை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2018-10-04 22:00 GMT
ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்க குட்டி நாடார். இவருடைய மனைவி ரத்தினபாய் (வயது 68). தங்க குட்டி நாடார் இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். ரத்தினபாய் கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி தூத்துக்குடியில் நடந்த திருமண வீட்டுக்கு சென்றுவிட்டு, பஸ்சில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

அப்போது அவருடன் பஸ்சில் பயணித்த 40 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர், தன்னை அரசு அதிகாரி என்றும், முள்ளக்காடு பகுதியில் நடக்கும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிகளை ஆய்வு செய்ய செல்கிறேன் என்றும் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். 2 பேரும் முள்ளக்காடு பஸ் நிறுத்தத்தில் இறங்கினர். அப்போது ரத்தினபாயின் வீட்டுக்கு சென்ற அந்த பெண், வீட்டின் கழிவறைக்கு சென்றுவிட்டு வந்தார்.

அப்போது அந்த பெண் ஸ்பிக்நகரில் உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். உங்கள் தங்க வளையல்களை கொஞ்சம் கொடுங்கள். நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் உங்களிடம் கொடுத்துவிடுகிறேன் என்று அவரிடம் கேட்டுள்ளார். அவரை நம்பி தனது 6 பவுன் வளையல்களை கொடுத்துள்ளார். நகையை வாங்கி சென்ற அந்த பெண் மீண்டும் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினபாய் குடும்ப த்தினரிடம் விவரத்தை தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிமேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்