தொழிலாளர் நலசட்டங்களை அமல்படுத்தக்கோரி திருவாரூரில், இந்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்தக்கோரி இந்திய தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-10-03 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. இந்திய தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் நல சட்டங் களை அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். இந்திய, பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். போராட்டம் நடத்தும் தொழிற்சங்கத்தோடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்