பூதப்பாண்டியில் சீராக குடிநீர் வழங்கக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
பூதப்பாண்டியில் சீராக குடிநீர் வழங்கக்கோரி பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூதப்பாண்டி,
பூதப்பாண்டி பேரூராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும், ஜீவாநகர்–சாட்டுபுதூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வீடு வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தாததை கண்டித்தும் நேற்று பூதப்பாண்டி மண்டல பா.ஜனதா சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு பூதப்பாண்டி மண்டல தலைவர் விஜய் மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் கோட்ட இணை பொறுப்பாளர் கணேசன், மாவட்ட பார்வையாளர் ஈசை கிருஷ்ணன், கோலப்பன், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர் சிவகுமார், பூதப்பாண்டி தொழில் பிரிவு தலைவர் மணி உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் எம்.ஆர்.காந்தி பேரூராட்சி செயல் அலுவலர் மணியிடம் கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், ஒரு மாதத்தில் குறைகளை சரிசெய்யாவிட்டால் மீண்டும் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.