அக்காள்-தம்பியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது
அக்காள்-தம்பியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் புதுவிடுதியை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 50). இவரது அக்காள் காசியம்மாள் (55). இவர்கள் 2 பேரும் கடந்த 28-ந்தேதி இரவு சிவபெருமாளுக்கு சொந்தமான பம்பு செட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சிவபெருமாள், காசியம்மாளை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரெகுநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே ஊரை சேர்ந்த தி.மு.க. விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் பழனியப்பன் (46) என்பவருக்கும், சிவபெருமாளுக்கும் இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பழனியப்பனை கறம்பக்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் பழனியப்பன் கூலிப்படையை ஏவி சிவ பெருமாளையும், காசியம்மாளையும் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பழனியப்பனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் புதுக்கோட்டை காந்திநகர் 2-ம் வீதியை சேர்ந்த முருகராஜ் (31) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ளவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.