என்ஜின் இல்லாமல் பின்னோக்கி ஓடிய ரெயில் மோதியதால் விழுந்த கன்டெய்னரில் சிக்கி முதியவர் பலி
அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் என்ஜின் இல்லாமல் பின்னோக்கி ஓடிய ரெயில் கன்டெய்னர் மீது மோதியது. அப்போது கன்டெய்னர் விழுந்ததில் அதன் அடியில் சிக்கி முதியவர் பலி ஆனார்.
அம்பத்தூர்,
சென்னை அம்பத்தூர் ரெயில் நிலையம் 5 வழி பாதையை கொண்டது. இதன் 2 வழித்தடங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மற்ற 2 வழித்தடங்களில் புறநகர் மின்சார ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. கடைசி பாதையான 5-வது தண்டவாள பகுதி சரக்கு ரெயில்களை நிறுத்தி ஜல்லிக்கற்கள் ஏற்றும் முனையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 5-வது தண்டவாள பகுதியில் 16 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் ஒன்றில் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சரக்கு ரெயில் பின்னோக்கி சென்றது. இதனால் அங்கு இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து பின்னோக்கி ஓடிய அந்த ரெயில் திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வழியில் உள்ள ரெயில்வே கேட் அருகில் தண்டவாளத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த ரெயில்வே ஊழியர்கள் பயன்படுத்தி வந்த கன்டெய்னர் மீது மோதியது.
ரெயில் மோதிய வேகத்தில் அந்த கன்டெய்னர் கவிழ்ந்தது. அப்போது கன்டெய்னர் அருகே அமர்ந்து இருந்த அம்பத்தூர் இந்திராகாந்தி நகரை சேர்ந்த மணி (வயது 70) என்பவர் அதன் அடியில் சிக்கிக்கொண்டார்.
இதில் அவர் உடல் நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கன்டெய்னர் இருந்த ரெயில்வே கேட் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் முக்கியமான பாதையாகும். நேற்று விடுமுறை நாள் என்பதால் அந்த பாதையில் போக்குவரத்து குறைவாக இருந்தது.
பின்னோக்கி வேகமாக ஓடிய ரெயில் கன்டெய்னர் மீது மோதியதால்தான் வேகம் குறைந்து நின்றது. இல்லையென்றால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.
ரெயில் மோதிய கன்டெய்னர் பெட்டியை ரெயில்வே ஊழியர்கள் தங்களது ஓய்வு அறையாக பயன்படுத்தி வந்தனர். அந்த கன்டெய்னர் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டதாகும். விபத்தை ஏற்படுத்திய சரக்கு ரெயிலில் என்ஜின் ஏதும் பொருத்தப்படவில்லை. ஆனாலும் அந்த ரெயில் எப்படி பின்னோக்கி சென்றது என்பது தெரியவில்லை. ஊழியர்களில் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.