பாலமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான 520 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு
கரூர் அருகே பாலமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான 520 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
கரூர்,
தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களின் நலன் மற்றும் சொத்து குறித்து அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு மற்றும் திருத்தொண்டர்கள் சபை அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்று கூட்டாய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துக்களை மீட்டு வருகிறது.
அந்த வகையில் கரூர் அருகே க.பரமத்தியிலுள்ள பாலமலை பாலசுப்ரமணியசாமி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்களின் ஆக்கிரமிப்பு குறித்து திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன், அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு செயலாளர் சரவணகுமார் உள்பட குழுவினர் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது வருவாய்துறை ஆவணங்களை கொண்டு கோவிலுக்கு சொந்தமான நிலம் எங்கு, எங்கு இருக்கிறது என கண்டறிந்தனர்.
அப்போது பவித்திரம் பகுதியில் குவாரியில் இருந்து கொண்டுவரப்படும் மணலை சலிப்பதற்கான சலிப்பகம் ஒன்று கோவில் நிலத்தில் இருந்தது தெரிய வந்தது. இது போன்று கோவில் நிலங்களை பாதுகாக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி சம்பந்தப்பட்ட பரம்பரை அறங்காவலர்களை அழைத்தும் அந்த குழுவினர் விசாரித்தனர். பின்னர் பாலமலை பாலசுப்ரமணியசாமி கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை பல்வேறு இடங்களில் பார்வையிட்டு அதனை குறிப்பெடுத்து சென்றனர். இந்த ஆய்வின் போது அரவக்குறிச்சி தாசில்தார் பிரபு உள்பட வருவாய்துறையினர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சூரியநாராயணன் உள்பட அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதற்கிடையே பவித்திரம் பகுதியில் வைத்து, திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூரில் கோவில் ஆக்கிரமிப்பு சொத்துகள் தொடர்பாக 7-வது முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் க.பரமத்தி பாலமலை பாலசுப்ரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான 520 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பரம்பரை அறங்காவலர், அர்ச்சகர் உள்ளிட்டோர் கோவில் சொத்துகளை சட்டவிரோதமாக விற்பதற்கு துணைபோயிருந்தாலும், பொருளாதார இழப்பினை ஏற்படுத்த வழிவகுக்கும் வகையில் செயல்பட்டிருந்தாலும் அவர்களது சொந்த சொத்துகளை அரசு மூலம் ஏலத்துக்கு கொண்டுவந்து ஈடுசெய்வதுடன் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
கரூரில் ஏறக்குறைய 400 ஏக்கர் நிலங்களை கோவிலின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இதற்கு வருவாய்துறை, இந்துசமய அறநிலையத்துறை, காவல்துறையினரின் ஒத்துழைப்பு உறுதுணையாக உள்ளது. இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் இருந்தால் தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு விடலாம். அரசு சார்பில் முதல் கட்டமாக 5 லட்சம் ஏக்கர் நிலத்தினை கண்டறிந்து அதனை மீட்க அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அன்னதானம் செய்வது, வழிப்போக்கர்களுக்கு நீராதாரம் வழங்குவது என்பன உள்ளிட்டவற்றிற்கு ஒதுக்கப்பட்ட தர்மசாசன சொத்துகள் அறநிலையத்துறை கவனத்திற்கு கொண்டுவரப்படாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. தமிழக கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் இலங்கையிலும் உள்ளது. ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசாமி கோவில், திருவாடனை ஆதிரத்தினேஷ்வரர் கோவில், மதுரை மீனாட்சி- சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இலங்கையில் உள்ளது தெரிய வந்திருக்கிறது. பாகுபாடில்லாமல் அதுவும் மீட்கப்படும். அறநிலையத்துறை சொத்துகளின் மீது குறைந்தபட்ச நடவடிக்கையை மேற்கொண்டு தொகையை வசூலித்தால், அறநிலையத்துறை சார்பில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றை கூட ஏற்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பரம்பரை அறங்காவலர்கள் கோவில் சொத்துகளை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தாமல் இருந்தால் அவர்களை நீக்கிவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். பல்வேறு தொழில்நிறுவனங்கள் கோவில் சொத்துகளை ஆக்கிரமித்து இயங்குகிறது. உண்மை நிலை கண்டறியப்பட்டவுடன் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.