டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
திருச்சியில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள வெனிஸ் தெரு, காந்திநகர், அந்தோணியார் கோவில் தெரு ஆகிய இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய இடத்தின் முகப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க பணிகள் நடந்து வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் சென்று வரும் பிரதான சாலை மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும் டாஸ்மாக் கடை திறக்க கூடாது எனவும், வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும்படியும் கூறியிருந்தனர்.
இதேபோல அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பஸ் நிறுத்தத்தின் பின்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க பணிகள் நடந்து வருவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், டாஸ்மாக் கடை திறக்க கூடாது என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “இந்து கோவில்களுக்கு எதிராக கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.
திருச்சி மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் விவசாய தொழிலாளர்கள் கொடுத்த மனுவில், “முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை ஊராட்சிகளில் வறுமையில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்” என கூறியிருந்தனர்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவர் பாஸ்கரன் அளித்த மனுவில், “முசிறி அருகே கரட்டாம்பட்டி கிராமத்தில் கல் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது” என தெரிவித்திருந்தார்.
நிறுவன தலைவர் பொன்.முருகேசன் தலைமையில் மக்கள் மறுமலர்ச்சி கழகத் தினர் கொடுத்த மனுவில், “சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கருவறை முன்பு எந்தவித பாகுபாடும் காட்டாமல் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தி நடைமுறைப்படுத்திட வேண்டும்” என கூறியிருந்தார். திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் சாதி பெயர்களில் தெருக்கள் இருப்பதை நீக்கிட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மனு அளித்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுவில், “மாவட்டத்தில் எல்லா வாய்க் கால்களிலும் உரிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி விமானநிலைய விரிவாக்கத்திற்கு விவசாய நிலத்தை எடுக்க கூடாது” என்று கூறியிருந்தனர்.
த.மா.கா. விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் உள்பட நிர்வாகிகள் அளித்த மனுவில், “கிராம சபை கூட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.
மதுரையை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் மாத தவணையாக பணம் கட்டி ஏமாந்த திருச்சியை சேர்ந்தவர்களும், நிறுவனத்தின் முகவர்களும் வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்திருந்தனர். மேலும் தங்களுக்குரிய பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை கோரி மனு கொடுத்தனர்.
இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் ராஜாமணி அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.