குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 3½ பவுன் நகை பறிப்பு

குடிக்க தண்ணீர் கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் 3½ பவுன் நகை பறித்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-30 21:45 GMT

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டையை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 78). இவரது மனைவி வள்ளியம்மாள் (70). நேற்று காலை இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த ஒருவர் தனக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என கேட்டார். இதுகுறித்து தனது கணவரிடம் கேட்டு சொல்வதாக வள்ளியம்மாள் தெரிவித்தார்.

அதன் பிறகு குடிக்க தண்ணீர் தருமாறு அந்த நபர் கேட்டார். தண்ணீர் எடுத்து வர வள்ளியம்மாள் உள்ளே சென்றதும், அவரை பின் தொடந்து உள்ளே சென்ற அந்த நபர் அவரது கழுத்தை நெரித்து வள்ளியம்மாள் அணிந்திருந்த 3½ பவுன் நகைகளை பறித்து கொண்டு ஓடி விட்டார்.

இதுகுறித்து வள்ளியம்மாள் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நகையை பறித்து சென்றவர் ஆர்.கே.பேட்டை அருகே கிருஷ்ணாகுப்பம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (40) என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்