விருதுநகர்– சிவகாசி சாலையில் தடுப்பு வேலி அமைக்க எதிர்ப்பு

விருதுநகரில் சிவகாசி சாலையில் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து புறவழிச்சாலை சந்திப்பு வரை சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

Update: 2018-09-29 20:29 GMT

விருதுநகர்,

விருதுநகரில் சிவகாசி சாலையில் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து புறவழிச்சாலை சந்திப்பு வரை சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் நடுவே நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்பு வேலி அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினர். சாலையின் அகலம் ஒரே சீராக இல்லாததால் தடுப்பு வேலி அமைத்தால் வாகன போக்குவரத்துக்கும், நடந்து செல்வோருக்கும் பாதிப்பு ஏற்படும் என கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறும் இடத்துக்கு வந்து விபத்து தடுப்புக்காகவே வேலி அமைப்பதாக விளக்கம் கூறினர். ஆனால் வேலி அமைத்தால் வாகனங்கள் நடைபாதை வரை வரும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதாலும், பொதுமக்கள் சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படும் எனவும் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வேலி அமைப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் பணியை நிறுத்தி விட்டு இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்