மலையில் தங்கி போராட்டம் நடத்த முயன்ற கிராமத்தினர்

விருதுநகர் அருகே மலையில் தங்கி போராட்டம் நடத்த கிராமத்தினர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-29 20:24 GMT

விருதுநகர், செப்.30–

விருதுநகர் அருகே மூளிப்பட்டி கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் அறிவிப்பு பலகை உள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்ததன்பேரில் விருதுநகர் தாசில்தார் சீனிவாசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் அந்த அறிவிப்பு பலகையை அருந்ததியர் சமுதாயத்தினரே அகற்றிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அருந்ததியர் காலனியில் வசிக்கும் பெண்கள் உள்பட ஏராளமானோர் கோபால்சாமி கோவில் மலைக்கு சென்று அங்கு தங்கி போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

 இதற்காக கோபாலசாமி கோவில் மலைக்கு செல்லும் பாதையில் அமர்ந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அருந்ததியர் சமுதாயத்தினர் போராட்டத்தை திரும்ப பெற்று காலனிக்கு திரும்பினர். இப்பிரச்சினை தொடர்பாக தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்