காஞ்சீபுரம் அருகே பிளஸ்-2 மாணவர் தீக்குளித்து தற்கொலை
காஞ்சீபுரம் அருகே பிளஸ்-2 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடி பழைய காலனியை சேர்ந்தவர் அமாவாசை. இவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் கபிலேஷ் (வயது 17). இவர் கோவிந்தவாடி பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார். இவரது தாய்வேலைக்கு சென்றுவிட்டார்.
கபிலேஷ் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென வீட்டில் இருந்து புகை வந்தது.
தீயில் கருகி சாவு
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கதவை திறந்து உள்ளே சென்றார்கள். அப்போது கபிலேஷ் தீயில் கருகி இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், பாலுச்செட்டிச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து, மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பிளஸ்-2 மாணவன் கபிலேஷ் எதற்காக தீக்குளித்து இறந்தார், குடும்ப பிரச்சினையா? அல்லது தந்தை இறந்த சோகமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.