ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டர் மீது நாற்காலியை வீசிய 2 பேர் கைது செருப்பை கழற்றிவிட்டு உள்ளே வருமாறு கூறியதால் ஆத்திரம்

ஆரம்ப சுகாதார மையத்தில் செருப்பை கழற்றி வைத்துவிட்டு உள்ளே வருமாறு கூறிய டாக்டர் மீது நாற்காலியை வீசிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-28 23:15 GMT
பால்கர், 

ஆரம்ப சுகாதார மையத்தில் செருப்பை கழற்றி வைத்துவிட்டு உள்ளே வருமாறு கூறிய டாக்டர் மீது நாற்காலியை வீசிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செருப்பை கழற்றிவிட்டு...

பால்கர் மாவட்டம், வன்காவ் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டராக இருப்பவர் மித்திலேஷ் (வயது25). சம்பவத்தன்று இங்கு வனிதா (32) என்ற பெண் கையில் ஏற்பட்ட வெட்டு காயத்திற்காக சிகிச்சை ெபற வந்தார்.

பின்னர் டாக்டர் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருந்த போது, அவரது உறவினர்கள் ஜெயேந்திரா (30), ஆஷிஸ் (25) ஆகியோர் செருப்பு காலுடன் உள்ளே நுழைந்தனர். அவர்களை டாக்டர் மித்திலேஷ் செருப்பை வெளியே கழற்றி வைத்துவிட்டு உள்ளே வருமாறு கூறினார்.

டாக்டர் மீது தாக்குதல்

இதனால் டாக்டருக்கும், பெண்ணின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அவர்கள் அங்கு இருந்த இரும்பு நாற்காலியை தூக்கி டாக்டர் மீது வீசினர். இதில் நாற்காலி டாக்டரின் நெஞ்சை தாக்கியது. இதேபோல அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்த நர்சையும் சிறை பிடித்தனர்.

இதுகுறித்து டாக்டர் மித்திலேஷ் போலீசுக்கு புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயேந்திரா, ஆஷிசை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்