ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.29 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை அமல்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவு
ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.29 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பெங்களூரு,
ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.29 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் குமாரசாமி பேசியதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் ரூ.29 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கான திட்டங்களை குறித்த காலத்திற்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தவறு நடக்காமல் திட்டங்களை அமல்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டங் களின் பயன், தகுதியான பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும்.
பயனாளிகளை தேர்ந்தெடுக்க...
மாநிலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். இதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு அதிகாரிகள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும். திட்டங்களில் பயனாளிகளை தேர்ந்தெடுக்க தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரிகள் விரைவாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரிகள் எச்.டி.ரேவண்ணா, பிரியங்க் கார்கே, ஜி.டி.தேவேகவுடா, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.