போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய தொழில் அதிபருக்கு 1 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு

போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய தொழில் அதிபருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2018-09-27 23:40 GMT
மும்பை, 

போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய தொழில் அதிபருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

போலீஸ்காரர் மீது தாக்குதல்

தென்மும்பை, பாபுல்நாத் மார்க்கெட் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி போக்குவரத்து போலீஸ்காரர் மகேந்திர பர்தேசி பணியில் இருந்தார். அங்கு அவர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அப்போது மாலை 4.30 மணியளவில் கோரேகாவ் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ரமேஷ் ஒருவழிப்பாதையில் விதிமுறை மீறி காரில் வந்தார். போலீஸ்காரர் அவரை வழிமறித்து திரும்பி செல்லுமாறு கூறினார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தொழில் அதிபர் போலீஸ்காரரை தாக்கினார்.

1 ஆண்டு ஜெயில்

இந்த சம்பவம் குறித்து காம்தேவி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய தொழில் அதிபர் ரமேசுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

மேலும் செய்திகள்