பேட்டரி தயாரிக்கும் நிறுவனத்தில் விஷ வாயு தாக்கி 2 ஊழியர்கள் சாவு உடல்களுடன் உறவினர்கள் போராட்டம்
ஓசூர் அருகே பேட்டரி தயாரிக்கும் நிறுவனத்தில் விஷ வாயு தாக்கி 2 ஊழியர்கள் இறந்தனர். அவர்களின் உடல்களுடன் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது சிச்சிருகானப்பள்ளி. இந்த ஊரில் தனியாருக்கு சொந்தமான பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கழிவுநீரை சுத்திகரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொட்டி ஒன்று அமைக்கப்பட்டு பேட்டரி தயாரிக்க பயன்படுத்தும் ரசாயன கழிவுநீர் அதில் தேக்கி வைக்கப்படுகிறது.
அதை ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் அகற்றி சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாகலூர் அருகே உள்ள கொத்தப்பள்ளியை சேர்ந்த நாகேஷ் (வயது 25) என்பவர் சுத்திகரிப்பு மையத்திற்கு சென்று பராமரிப்பு பணியை மேற்கொண்டார்.
அந்த நேரம் அவர் அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்தார். அப்போது அதில் இருந்து விஷவாயு கசிந்ததால் நாகேஷ் மயங்கி அந்த இடத்திலேயே விழுந்தார். இதை கண்ட பாகலூரை சேர்ந்த மற்றொரு ஊழியரான மஞ்சுநாத் (32) என்பவர் அங்கு ஓடி சென்று நாகேசை காப்பாற்ற வந்தார். அப்போது மஞ்சுநாத்தையும் விஷவாயு தாக்கியது. இதில் நாகேஷ் மற்றும் மஞ்சுநாத் ஆகிய 2 பேரும் விஷ வாயு தாக்கி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து அங்கிருந்த ஊழியர்கள் ஓசூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து நாகேஷ், மஞ்சுநாத் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டனர். இதற்கிடையே நாகேஷ், மஞ்சுநாத் ஆகிய 2 பேரும் விஷவாயு தாக்கி இறந்த சம்பவம் அறிந்ததும் அவர்களின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது பாகலூர் போலீசார் அங்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர்.
இதையடுத்து 2 பேரின் உடல்களையும் கொண்டு செல்ல உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, ஓசூர் தாசில்தார் முத்துப்பாண்டி ஆகியோர் சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷவாயு தாக்கி ஊழியர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.