மணல் கடத்தல்; 3 பேர் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-26 20:57 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு போலீசார் நேற்று முன்தினம் காவல்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த சொக்கநல்லூர் சத்திரத்தை சேர்ந்த தாஸ் (வயது 32), உடன் வந்த ஜெயசீலன் (40) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் பெரும்பாக்கம் ஏரி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மினி டெம்போ, ஒரு மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் அதில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரத்தை அடுத்த சின்னயங்குளம் என்ற இடத்தில் மோட்டார்சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக, தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது மோட்டார்சைக்கிளில் மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையொட்டி சின்னயங்குளத்தை சேர்ந்த உதயகுமார் என்கிற உதயா (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

நந்தம்பேடு

திருவள்ளூரை அடுத்த நத்தம்பேடு பகுதியில் உள்ள பாக்கம் பெரிய ஏரியில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக மாவட்ட திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ், நத்தமேடு கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி மற்றும் வருவாய்த்துறையினர் பாக்கம் பெரிய ஏரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு டிராக்டரில் திருட்டுத்தனமாக மணல் எடுத்து வந்தது கண்டறியப்பட்டு அந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த டிராக்டரில் இருந்த 2 யூனிட் மணலையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இனிமேலும் மணல் கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் தாசில்தார் எச்சரித்தார்.

மேலும் செய்திகள்