காதல்ஜோடி போலீசில் தஞ்சம்

பாலக்கோடு அருகே காதல்ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

Update: 2018-09-26 21:45 GMT
பாலக்கோடு, 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன். இவருடைய மகன் வாசுதேவன் (வயது 24). லாரி டிரைவர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மகள் ஜெயப்பிரியா (21) என்பவரும் காதலித்து வந்தனர். ஜெயப்பிரியா பி.பி.ஏ. பட்டதாரி.

இருவர் வீட்டின் பெற்றோர்களும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் கடந்த 21-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், என்று கேட்டு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதரிடம் தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர். அவருடைய உத்தரவின்பேரில் பாலக்கோடு இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், காதல்ஜோடியின் பெற்றோரை அழைத்து சமரசம் செய்தனர். பின்னர் அந்த ஜோடியை அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்