கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் தொடங்கப்பட்ட மணல் குவாரியை நிரந்தரமாக மூட கோரி சாலை மறியல்
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் தொடங்கப்பட்ட மணல் குவாரியை நிரந்தரமாக மூட கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி ஏற்கனவே தொடங்கப்பட்டு பல அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டு விட்டது. அரியலூர், தஞ்சை, ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீண்ட தூரம் குழாய் வழியாக தண்ணீர் எடுத்து செல்லப்படும் நிலையில் ஆற்றில் மணல் எடுப்பதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் மணல் அரிப்பு ஏற்பட்டு கொள்ளிடம், அணைக்கரை பாலங்களின் தூண்கள் சேதமடைய தொடங்கி விட்டன. பொதுமக்களின் தொடர் போராட்டத்தை மீறியும் தற்போது திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் அரசு மணல் குவாரி தொடங்கப்பட்டு நேற்று முதல் செயல்பட தொடங்கிவிட்டது.
கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் அரசு மணல் குவாரி செயல்படக்கூடாது. அதனை நிரந்தரமாக மூட வலியுறுத்தி திருமானூரை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் தனபால், கைலாசம், பாஸ்கர், திருநாவுக்கரசு உள்பட அந்த குழுவினை சேர்ந்தவர்கள் நேற்று காலை திருமானூர் பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அப்போது மணல் குவாரியை மூடக்கோரி பல்வேறு கோஷங்களை மறியலில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தாஸ் தலைமையிலான போலீசார் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர். ஆனாலும் பொதுமக்கள் கைவிடாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மொத்தம் 120 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் இரவில் விடுவிக்கப்பட்டனர்.