சின்னவாய்க்காலுக்கு தண்ணீர் வராததால் 1,200 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் பாதிப்பு
கொள்ளிடம் அருகே சின்னவாய்க்காலுக்கு தண்ணீர் வராததால் 1,200 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கடுக்காமரம் என்ற கிராமத்தில் புதுமண்ணியாற்றில் இருந்து சின்னவாய்க்கால் என்ற பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் புத்தூர், எருக்கூர், அரசூர், காப்பியகுடி, மணலகரம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று ஆலங்காடு கிராமத்தில் உள்ள செங்கழனி வாய்க்காலில் கலக்கிறது. இந்த சின்னவாய்க்கால் மேற்கண்ட கிராமங்களில் உள்ள 1,200 ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வாய்க்காலாகவும், வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. இந்த வாய்க்கால் சுமார் 6 கி.மீட்டர் தூரம் செல்கிறது. இந்த வாய்க்கால் கடந்த 5 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் வாய்க்காலில் புதர்மண்டி தூர்ந்து போய் உள்ளது. இதனால் புதுமண்ணியாற்றில் இருந்து சின்ன வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. அப்படியே தண்ணீர் திறந்துவிட்டாலும் வாய்க்காலில் தண்ணீர் செல்வது கடினமாக இருக்கும்.
இந்த வாய்க்காலை நம்பி அந்தபகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் வேதனையில் உள்ளனர். இதனால் இந்த ஆண்டு 1,200 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எருக்கூர் பாசனதாரர் சங்க தலைவர் ராமு கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வீணாக கடலில் சென்று கலந்தது. ஆனால் வறண்டு கிடக்கின்ற சின்ன வாய்க்காலுக்கு தண்ணீர் இதுவரை வரவில்லை. இதனால் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்வது கேள்வி குறியாகிவிட்டது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக சின்ன வாய்க்காலை தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.