குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

அ.கலையம்புத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

Update: 2018-09-25 21:30 GMT
நெய்க்காரப்பட்டி.


பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் 1, 2, 3-வது வார்டுகளில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் சரிவர வழங்கவில்லை. மேலும் அப்பகுதி மக்களுக்கு தேசிய ஊரக வேலைதிட்டத்தில் சரியாக வேலை வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பழனி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அ.கலையம்புத்தூரில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகுடபதி, பழனி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். மேலும் தேசிய ஊரக வேலைதிட்டத்துக்கு கால தாமதமாக வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், இனி வருங்காலங்களில் சரியான நேரத்திற்கு வேலைக்கு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியலால் அப்பகுதியில் காலை 11.30 மணியில் இருந்து 12 மணி வரை 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்