புனலூர்- கொல்லம் பயணிகள் ரெயில் நேரம் இன்று முதல் மாற்றம்
புனலூர்- கொல்லம் பயணிகள் ரெயில் நேரம் இன்று (புதன்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை,
புனலூர்- கொல்லம் பயணிகள் ரெயில் நேரம் இன்று (புதன்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
புனலூர்- கொல்லம்
புனலூர்-கொல்லம் பயணிகள் ரெயில் நேரம் இன்று (புதன்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பழைய நேரம் அடைப்பு குறிக்குள் கொடுக்கப்பட்டு உள்ளது.
புனலூர் (காலை 7.55 மணி) காலை 8.15 மணி, ஆவுனேசுவரம் (8.05 மணி) 8.25 மணி, கூரி (8.12 மணி) 8.32 மணி, கொட்டாரக்கரை (8.22 மணி) 8.43 மணி, எழுகோன் (8.31 மணி) 8.52 மணி, குண்டாரா கிழக்கு (8.37 மணி) 8.58 மணி, குண்டாரா (8.44 மணி) 9.06 மணி, சந்தனதோப் (8.52 மணி) 9.12 மணி, கிளிகொல்லூர் (8.58 மணி) 9.18 மணி, கொல்லம் (காலை 9.15 மணி) காலை 9.40 மணி.
கொல்லம்- புனலூர்
அதேபோல் கொல்லம்- புனலூர் நேரமும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கொல்லம் (மாலை 6 மணி) 5.40 மணி, கிளிக்கொல்லூர் (6.10 மணி ) 5.50 மணி. சந்தனதோப் (6.15 மணி) 5.56 மணி, குண்டாரா (6.22 மணி) 6.05 மணி, குண்டாரா கிழக்கு (6.28 மணி) 6.11 மணி, எழுகோன் (6.34 மணி) 6.17 மணி, கொட்டாரக்கரை (6.44 மணி) 6.26 மணி, கூரி (6.54 மணி) 6.38 மணி, ஆவுனேசுவரம் (மணி 6.59) 6.45 மணி, புனலூர் (இரவு 7.20 மணி ) இரவு 7.05 மணி.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.