சேலம்: உரிமையியல் கோர்ட்டுகள் தொடக்க விழா - மாவட்ட முதன்மை நீதிபதி பங்கேற்பு
சேலத்தில் புதிதாக உரிமையியல் கோர்ட்டுகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் பங்கேற்றார்.
சேலம்,
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் 3-வது மற்றும் 4-வது கூடுதல் உரிமையியல் கோர்ட்டுகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் தலைமை தாங்கி புதிய கோர்ட்டுகளுக்கான கல்வெட்டை திறந்து வைத்து பேசினார்.
அவர் பேசும் போது, ‘நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு அதிக கோர்ட்டுகள் உருவாக்குவது அவசியமாகிறது. வழக்குகளில் ஏற்படும் தாமதம் மக்களிடையே நம்பிக்கையின்மையை உருவாக்கி கோர்ட்டை நாடி வருவோர் எண்ணிக்கையை குறைத்துவிடும். கோர்ட்டு மூலம் உடனடி தீர்வு கிடைக்கும் போது, சட்டத்துக்கு புறம்பான உதவிகளை நாடிச்செல்லும் முடிவை மக்கள் எடுக்க மாட்டார்கள்’ என்றார்.
மேலும் கோர்ட்டு வளாகத்தில் தொடுதிரை இணையவசதியை, மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சேலம் மாவட்ட கோர்ட்டில் உள்ள வழக்குகளின் விவரங்கள் குறித்து, வக்கீல்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் விஸ்வநாத், முதன்மை குற்றவியல் நீதிபதி சிவஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.