பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-24 21:15 GMT

உசிலம்பட்டி,

உசிலம்பட்டியில் உள்ள தேனி ரோட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநில மாணவரணி செயலாளர் பாஸ்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட செயலாளர்கள் மலர்க்கொடி, ஆதிசேடன், பால்பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்