இருளர் காலனி மக்களுக்கு பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது பீர்ஜேப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் இருளர் சமூகத்தை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

Update: 2018-09-23 22:30 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது பீர்ஜேப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் இருளர் சமூகத்தை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த 2008-ம் ஆண்டு 10 குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்கியுள்ளது. தற்போது மக்கள் தொகை பெருகி மேலும் 20 குடும்பங்களுக்கு மேல் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள்.

20 குடும்பங்களுக்கும் பட்டா கேட்டு கடந்த 2 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் கனியமுதன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியிடம் இருளர் காலனி மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட பொருளாளர் மாயவன், மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், தொண்டர் அணி மாநில அமைப்பாளர் நாசி.சரவணன், ஆசிரியர் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் தமிழ்மணி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் வேங்கை வளவன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்