பல கோடிப் பேர் பசியால் வாடும் பரிதாபம்!

உலகில் சுமார் 80 கோடிப் பேர் பசியால் வாடுவதாக ஐ.நா. வெளியிட்டிருக்கும் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2018-09-22 05:18 GMT
காலநிலை மாற்றத்தால் உலகளவில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு அதனால் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தாக ஐ.நா. அந்த அறிக்கையில் கூறுகிறது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாக நடத்தப்பட்ட அந்த ஆய்வு தொடர் பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

கடந்த ஆண்டு உலகில் 82 கோடி மக்கள் பசியின் கொடுமையை அனுபவித்திருக்கின்றனர். அதாவது 10 பேரில் ஒருவர் உணவு இன்றி தவித்துள்ளார். 2016-ம் ஆண்டு 81 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது உயர்ந் துள்ளது. இதேநிலை நீடித்தால் கடும் பிரச்சினை களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பல ஆண்டுகளாகக் குறைந்திருந்த பசி எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பல மடங்கு அதிகரித்துள்ளது. தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில்தான் அதிக ஊட்டச்சத்துக் குறைபாடு, பட்டினி போன்ற பிரச்சினைகள் நிலவுகின்றன. ஆசிய நாடுகளில் இது கணிசமான அளவு குறைந்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் 18 கோடி யாக இருந்த ஊட்டச் சத்து குறைபாடுள்ளவர் களின் எண்ணி க்கை, 2016 -ம் ஆண்டு 22 கோடியாக வும், கடந்த ஆண்டு 23 கோடியாகவும் அதிகரித்து ள்ளது.

பருவநிலை மாற்றம், மழை அளவு குறைதல், விவசாயப் பருவங்கள் மாறுபடுவது, அதிகப்படியான வெள்ளம் மற்றும் அதிகப்படியான வறட்சி போன்ற இயற்கை க்கு முரணான காரணிகளே பட்டினிப் பிரச்சினை அதிகரிக்கக் காரணம்.

பருவநிலை மாற்றங் களால், மிக முக்கிய உணவுப்பொருள்களான அரிசி, கோதுமை, சோளம் போன்றவற்றின் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனால் உணவுத் தயாரிப் புகள் குறைந்து உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பதால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களால் உணவு வாங்கமுடியாமல் பசியில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. விளக்கியுள்ளது.

பசி இல்லாத உலகைப் படைக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்!

மேலும் செய்திகள்