பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அதிகாரி வழக்கு
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரின் பேரில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.
சாத்தூர்,
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக செய்தி வெளியானது.
அதைத்தொடர்ந்து எச்.ராஜா மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உதவி ஆணையர் செல்வி புகாரின் பேரில் இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அவதூறு பரப்பும் வகையில் பேசுதல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.