போலி கால்சென்டர் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது டெல்லியில் பிடிபட்டார்
மும்பை அந்தேரியில் போலி கால்சென்டர் நடத்தி, அமெரிக்க மக்களிடம் பணமோசடி செய்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை அந்தேரி பகுதியில் போலிகால் சென்டர் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கால் சென்டரில் பணிபுரிபவர்கள் அமெரிக்கர்களை இணையதள அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு, உங்களது செல்போன் மற்றும் மடிக்கணினியில் உள்ள வைரசை நீக்கி தருவதாக கூறி, ‘கிப்ட்’ கார்டுகள் மூலம் 100 அமெரிக்க டாலர்கள் முதல் 700 அமெரிக்க டாலர்கள் வரை வசூலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதுபற்றி கிடைத்த தகவலின்பேரில், போலீசார் அண்மையில் அந்த கால்சென்டரில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த டேவிட் அல்போன்சா, சந்தீப் யாதவ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் கால்சென்டரில் இருந்த கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து கைதான இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, இந்த மோசடிக்கு மூளையாக பிபின் குப்தா என்பவர் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
இந்தநிலையில், பிபின் குப்தா டெல்லியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் டெல்லி விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.