ஆரணியில் அம்மா உணவகங்களில் அமைச்சர் ஆய்வு

ஆரணியில் அம்மா உணவகங்களில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

Update: 2018-09-16 23:15 GMT
ஆரணி,

ஆரணி புதிய பஸ் நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அம்மா உணவகத்தில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமாக உள்ளதா?, உணவில் குறைபாடுகள் ஏதாவது உள்ளதா? என ஆய்வு செய்தார்.

அப்போது பணியாளர்கள் தங்களுக்கு 4 மாத சம்பளம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர். உடனே அவர், நகராட்சி ஆணையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதனையடுத்து அவர், நாளை (இன்று) 2 மாத சம்பளம் வழங்குவதாக கூறினார்.

இதேபோல ஆரணி அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்திலும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வக்கீல் கே.சங்கர், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரி பி.பாபு, ஆரணி ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்