கோத்தகிரியில் பட்டாசு கடைக்கு அனுமதி வழங்கியுள்ள இடங்களில் ஆர்.டி.ஓ. ஆய்வு
கோத்தகிரியில் பட்டாசு கடைக்கு அனுமதி வழங்கியுள்ள இடங்களில் ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்டது புடியங்கி. இங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த பணிகளை குன்னூர் ஆர்.டி.ஓ. பத்ரிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் கோலடீ சாராள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் குண்டாடா அரசு பள்ளி வளாகம், கோத்தகிரி பேரூராட்சி வளாகம் ஆகிய பகுதிகளில் உள்ள அபாயகரமான மரங்கள் மற்றும் பட்டாசு கடை வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ள காம்பாய் கடை, பஸ் நிலையம், டானிங்டன் மார்க்கெட் ஆகிய இடங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது தாசில்தார் ரவிக்குமார், வருவாய் ஆய்வாளர் பூபேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.