திருமணமான 1½ ஆண்டில் பரிதாபம் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பூந்தமல்லியில், திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி இந்திரா நகர், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 61). இவருடைய மகள் ரேணுகா(31). இவருக்கு, பெங்களூருவைச் சேர்ந்த மூர்த்தி(34) என்பவருடன் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து தாய் வீட்டுக்கு வந்த ரேணுகா, மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்லாமல் இங்கேயே இருந்து வந்தார்.
நேற்று மதியம் வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற ரேணுகா, நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், அறையின் கதவை திறந்து பார்த்தனர். அங்கு தங்கள் மகள் ரேணுகா, தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் ரேணுகாவை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரேணுகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போலீசார், தற்கொலை செய்து கொண்ட ரேணுகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ரேணுகாவுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகிறது. அவர் கர்ப்பம் அடைந்து இருந்ததாகவும், ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் கலைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கணவர் மற்றும் அவரது பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரேணுகா கோபித்துக்கொண்டு பூந்தமல்லியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து கடந்த சில மாதங்களாக தங்கி இருந்தார். கர்ப்பம் கலைந்தது, கணவர் குடும்பத்தாருடன் கருத்துவேறுபாடு போன்ற பிரச்சினைகளால் மனம் உடைந்த ரேணுகா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? எனவும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். ரேணுகாவுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.