சத்தான ஜூஸ் தயாரிக்க உதவும் நியூட்ரி புல்லட்
உணவுப் பொருட்களில் நாம் சத்தானவற்றை தேடிப்பிடித்து சாப்பிட வேண்டியது கட்டாயமாகிறது.
மாறி வரும் நவீன உலகில் ஒவ்வொருவர் உடல் செயல்பாட்டிற்குத் தகுந்தவாறு ஊட்டச் சத்து உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
திட உணவுகளை விட திரவ உணவுகள் எளிதில் செரிப்பதோடு அதில் பச்சையான காய்கறிகள், பழங்கள், உலர் பருப்புகளைக் கொண்டு ஜூஸ் தயாரித்து சாப்பிடுவதை டாக்டர்கள் பெரிதும் பரிந்துரைக்கின்றனர்.
பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் ஜூஸர்கள், மிக்ஸிகளின் விரிவுபடுத்தப்பட்ட மாடலாகவே உள்ளன. ஆனால் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நியூட்ரிபுல்லட், ஜூஸ் தயாரிப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்டது. வழக்கமான ஜூஸர்களில் பழங்கள், காய்கறிகளைப் போட்டு ஜூஸ் தயாரிக்கும்போது, அது எவ்வளவுதான் அரைத்து சாறு பிழிந்தாலும், இறுதியில் வடிகட்டித்தான் சாப்பிட வேண்டியிருக்கும். வடிகட்டப்படும் நார்ப் பொருள்களில்தான் சத்துகள் விரயமாவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் நியூட்ரிபுல்லட்டில் பழங்கள், இலைகள், உலர் பருப்புகள் அனைத்துமே கரைந்து மிகுந்த சத்து நிறைந்த ஜூஸ் கிடைக்கும். இந்த நியூட்ரி புல்லட்டில் 600 வாட்ஸ் மோட்டார் பயன்படுத்தப்படுவதால் மிகச் சிறப்பாக செயல்பட்டு சத்தான ஜூஸை அளிக்கிறது. இதை சுத்தப்படுத்துவதும் எளிது.
நியூட்ரி புல்லட் ஜூஸருடன் இதற்கான செயலியும் உள்ளது. இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்தால் நீங்கள் ஜூஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் பழங்கள், காய்கறிகளின் அளவைப் பொறுத்து நீங்கள் அருந்தும் ஜூஸில் எந்த அளவிற்கு சத்துகள் (புரதம், கொழுப்பு, நார்ச்சத்து) உள்ளன என்பதை தெரிவிக்கும். இத்துடன் சுவை மிகு ஜூஸ் தயாரிப்பதற்கான ஆலோசனைகளும் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது கூடுதல் வசதியாகும்.
அமேசான் ஆன்லைன் மூலம் இதை வாங்கலாம்.