சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2018-09-04 21:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

நிவாரண பொருட்கள்

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு உதவும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வக்கீல்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து சட்ட தன்னார்வ தொண்டர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கேரளாவிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தலைமை தாங்கி கொடியசைத்து நிவாரண பொருட்கள் அடங்கிய லாரியை அனுப்பி வைத்தார். இந்த லாரியில் அரிசி, மருந்து பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

யார்–யார்?

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார்பு நீதிபதி செல்வம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அசன் முகமது, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி அரிஹரன், நீதித்துறை நடுவர்கள் அண்ணாமலை, பிஸ்மிதா, தமிழ்செல்வி ஆகியோரும், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் மற்றும் முதுநிலை நிர்வாக உதவியாளர் மாரியப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்