எல்லைக்காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலை

எல்லைக் காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு 139 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Update: 2018-09-03 07:14 GMT
எல்லைக்காவல் படை சுருக்கமாக பி.எஸ்.எப். என அழைக்கப்படுகிறது. இந்த படைப்பிரிவில் புதுடெல்லி தலைமை இயக்குனரகத்தில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 139 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் (ஒர்க்ஸ்) பிரிவில் 103 இடங்களும், ஜூனியர் என்ஜினீயர் (எலக்ட்ரிக்கல்) பணிக்கு 36 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 94 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 29 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 11 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 5 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...

கல்வித்தகுதி

எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் என்ஜினீயரிங் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணி உள்ளது.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

உடல்தகுதி

விண்ணப்பதாரர் 170 செ.மீ. உயரமும், 80-85 செ.மீ. மார்பளவும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் மற்றும் தேர்வு அனுமதி அட்டை படிவம் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட் களுக்குள் சென்றடைய வேண்டும்.

இது பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 1-7 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bsf.nic.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

மேலும் செய்திகள்