பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் தலைமை ஆசிரியர் கைது
நெல்லையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை,
நெல்லையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொந்தரவுநெல்லை டவுனில் பாரதியார் உயர்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு ஜூலியட் ரவிச்சந்திரன் (வயது 48) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் 8, 9–ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவிகள், தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் புகார் செய்தனர். அவர், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ்ஆனந்த்துக்கு உத்தரவிட்டார்.
மாணவிகளிடம் விசாரணைஇதையடுத்து அவருடைய தலைமையில் நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் ரேணுகா, குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் கார்த்திகா, பாலமுருகன், பரிமளா ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த பள்ளிக்கூடத்தில் விசாரணை நடத்தினர்.
மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் கலெக்டர் ஷில்பாவிடமும் தெரிவிக்கப்பட்டது.
போக்சோ சட்டத்தில் கைதுஅவருடைய உத்தரவின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ்ஆனந்த் நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தில் ஜூலியட் ரவிச்சந்திரனை கைது செய்தார். பின்னர் ஜூலியட் ரவிச்சந்திரனை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.