மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்தில் மகிமை பெரும் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்தில் மகிமை பெரும் திருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
உடன்குடி,
மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்தில் மகிமை பெரும் திருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கொடியேற்றம்தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் மணல் குன்றின் மீது திருச்சிலுவை திருத்தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகிமை பெரும் பெரும் திருவிழா 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான மகிமை பெரும் திருவிழா(439–வது) நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை முன்னிட்டு நாளை அதிகாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் முதல் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலியும், தொடர்ந்து வீரபாண்டியபட்டணம் பங்கு தந்தை ஆண்ட்ரூடிரோஸ் தலைமையில் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் ஆகியன நடக்கிறது.
திருப்பலிதிருவிழாவில் தினமும் காலை 5.15 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலியும், 5.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். வருகிற 13–ந் தேதி (வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோசுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். மாலை ஆராதனை, கோட்டார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த உபால்ரு சிறப்பு மறையுரை நிகழ்த்துகிறார். 14–ந் தேதி அதிகாலை 4 மணிக்கு திருப்பலி, 5 மணிக்கு மலையாள திருப்பலி, காலை 6 மணிக்கு திவ்ய ஜந்து திருக்காய சபையினர் பவனி வந்து, மகிமைப்பெரு விழா திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீர், பகல் 11 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்க திருப்பலி நடக்கிறது.
சிறப்பு பஸ்கள் இயக்கம்இதில் கேரளா, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து கலந்துகொள்வர். திருவிழாவுக்கு மக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை பங்கு தந்தை மரிய ஜாண் கோஸ்தா, உதவி பங்கு தந்தை மரிய சேவியர் ராஜா, திருத்தல ஆன்ம குரு தெயோபிலஸ், அருட்சகோதரர் பாக்கிய பவுல் மற்றும் ஆருட் சகோதரிகள், புனித யாகப்பர் ஆலய நல கமிட்டி, மணப்பாடு இறை மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.