ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் உதவி என்ஜினீயருக்கு 1 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி என்ஜினீயரு க்குஓராண்டுசிறை தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தானே,செப்.3-
ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி என்ஜினீயரு க்குஓராண்டுசிறை தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
லஞ்சம் கேட்ட என்ஜினீயர்
நவிமும்பையை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் தான் செய்த ஒரு பணிக்கான தொகையை பெறுவதற்கு பன்வெலில் உள்ள மாநில நீர்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த உதவி என்ஜினீயர் பிரமோத் (வயது51) என்பவர் அதற்கான தொகையை அனுமதிப்பதற்கு தனக்கு ரூ.75 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டு உள்ளார்.
இதற்கு ஒப்பந்ததாரர் முதற்கட்டமாக ரூ.40 ஆயிரம் தருவதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து வந்து விட்டார். பின்னர் சம்பவம் குறித்து அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
ஓராண்டுசிறை
லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த யோசனைப்படி சம்பவத்தன்று அலுவலகத்திற்கு வந்த ஒப்பந்ததாரர், ரூ.40 ஆயிரத்தை என்ஜினீயர் பிரமோத்திடம் கொடுத்தார். அப்போது லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்ட அவரை அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபணமானது. இதையடுத்து தீர்ப்பு கூறிய சிறப்பு கோர்ட்டு என்ஜினீயர் பிரமோத்துக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.