வில்லிவாக்கத்தில் அழகு நிலையத்துக்கு சென்ற மணப்பெண் மாயம்
நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் அழகு நிலையத்துக்கு சென்ற மணப்பெண் மாயமானார். இதனால் திருமணம் நின்றதால் மணமகன் அதிர்ச்சி அடைந்தார்.
செங்குன்றம்,
சென்னை வில்லிவாக்கம் திருவீதியம்மன் தெருவைச் சேர்ந்த 22 வயது பட்டதாரி பெண்ணுக்கும், திருவொற்றியூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று காலை சென்னை எண்ணூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருந்தது.
நேற்று முன்தினம் மாலை இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக மணப்பெண், தனது வீட்டின் அருகே உள்ள அழகு நிலையம் சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் இரவு 9 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவர் மாயமானது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அழகு நிலையத்துக்கு சென்று விசாரித்தனர். ஆனால் அவர் அங்கு வரவில்லை என்பது தெரிந்தது. அவரது தோழி, உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் அவரை காணவில்லை.
இதுபற்றி மணப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில் வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.
திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் மாயமான தகவல் மணமகன் வீட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டு மணமகன் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நேற்று முன்தினம் நடைபெற இருந்த திருமண வரவேற்பும், நேற்று நடைபெற இருந்த திருமணமும் நின்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.