வள்ளுவர் வந்தார்.. வாழ்த்துக்களை பெற்றார்..
கல்லூரி மாணவிகளிடம் தமிழ்ப் பற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
முன்பெல்லாம் ‘தமிழ் தெரியாது’ என்று சொல்வதை ‘கர்வமாக’ நினைத்து பேசிக் கொண்டிருந்த அவர்கள் இப்போது தமிழ் மீது மாறாத காதல் கொண்டிருக்கிறார்கள். பேச்சிலும், படிப்பிலும் தமிழை பயன்படுத்துகிறார்கள். ‘எங்களுக்கும் தமிழ் தெரியும்’ என்று சொல்வதில் பெருமைப்படுகிறார்கள். இப்படி பெருமைப்படுகிறவர்களில் கன்னடத்தையும், தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்ட கல்லூரி மாணவிகளும் இணைந்திருக்கிறார்கள்.
மகிழ்ச்சிக்குரிய இந்த மாற்றத்தை நாம் கண்டு உணர்ந்தது, வள்ளுவன் வழி என்ற நாட்டிய நாடக விழாவில். தமிழக அரசின் ‘தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்’ சார்பில் சென்னையில் இந்த நாட்டிய நாடக விழா நடத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சியை நடத்தியவர்கள் பள்ளி, கல்லூரி மாணவிகள். அதில் வள்ளுவனை நாட்டியத்தின் மூலமாக வாழ்த்திய மாணவிகளில் கன்னடம், ெதலுங்கு, மலையாளம் போன்றவைகளை தாய்மொழியாக கொண்டவர்களும் இருந்தார்கள். அவர்களும் சேர்ந்து தமிழின் சிறப்பை எடுத்துரைத்தார்கள்.
இந்த நாட்டிய நாடகத்தில் பாடல்களும், பாவனைகளும் அடங்கியிருந்தன. பாடல்கள் அனைத்தும் அர்த்தம் செரிந்தவைகளாக இருந்தன.
கையில் குறள் நூல் ஒன்றிருந்தால்
இவ்வுலகை வெல்லலாம்
சொல்லில் செயலில் எண்ணத்தில்
தூய்மையுடன் என்றும் உயர் மனிதராக வாழலாம்
கொல்லும் துயரங்கள் நீங்கி- தினம்
கொள்ளை மகிழ்வினில் திளைக்கலாம்.
... என்று திருக்குறளின் சிறப்பை எடுத்துச் சொன்ன பாடலுக்கு கல்லூரி மாணவிகளின் அபிநயம் பார்வையாளர்களிடம் கரகோஷத்தை பெற்றது.
கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, அன்புடமை, கல்லாமை, நிறைவு ஆகிய ஐந்து பிரிவுகளாக இந்த நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினார்கள். இதில் வேலைக்கு சென்றுகொண்டிருக்கும் இளம்பெண்களும் பங்குபெற்று நடனம் ஆடினார்கள். அவர்கள் அனைவருமே முறைப்படி பல வருடங்களாக நடனம் கற்றவர்கள். அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள ஸ்ருதிலய வித்யாலயா என்ற நாட்டியப் பள்ளியில் நடனம் கற்றவர்கள்.
‘வான் சிறப்பு’ என்ற குறளுக்கு அரங்கத்தில் நடனம் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தபோது, அரங்கத்திற்கு வெளியே மழை வெளுத்துவாங்கிக் கொண்டிருந்தது. அது மழையின் சிறப்பை எடுத்துரைக்கும் பாடல்.
மண்ணிற்கு சிறப்புகள் பலப்பல உண்டு- நம்
விண்ணிற்கு சிறப்போ ஒன்றே ஒன்று- நம்
வான்புகழ் வள்ளுவன் கூறியதும் அதுதான்
அதுதான் மழை..
அதுவே மழை..
அடடா மழை.. அழகே மழை..
.. என்ற பாடலும், நடனமும் திருக்குறளுக்கும்- மழைக்கும் சிறப்பு செய்வதாய் அமைந்திருந்தது.
கல்வியின் மகத்துவத்தை திருவள்ளுவர் மிக அற்புதமாக குறளில் விளக்கியிருக்கிறார். அதை பாடலில்..
வள்ளுவனும் சொன்னானே அன்று
நன்மைகள் தருவதும் நற்கல்விதான் என்று
கல்வியினை நாம் கற்றுக்கொண்டால்
காண்கின்ற ஊரெல்லாம் நமதாகுமே
கற்றிருந்தால் நமக்கிருக்கும்
அழகிய இருகண்கள்
கல்லார்க்கு இருப்பவைதான்
பார்வையில்லா புண்கள்..
.. இந்த பாடலுக்கு ரொம்பவும் ரசித்து ஆடினார்கள். அவர்கள் கல்வியின் பெருமையை உணர்ந்த மாணவிகள் என்பதுதான் அதற்கு காரணம்.
பொதுவாக இப்போது மேற்கத்திய நாட்டிய நிகழ்ச்சிகளும், பேஷன் ஷோக்களும் நிறைய நடக்கின்றன. அவைகளை ரசிப்பவர்கள்தான் அதிகம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. அவை உண்மையல்ல, அரசின் சார்பில் நடைபெறும் தமிழின் புகழ் கூறும் நாட்டிய நாடகங்களுக்கும் ரசிகர்கள் பாராட்டு கிடைக்கும் என்பதை இந்த வள்ளுவன் வழி நாட்டிய நாடகம் உணர்த்தியது. முறைப்படி பரதநாட்டியம் கற்ற 18 பேர் இதில் இடம் பெற்றார்கள். வள்ளுவராக வேடமணிந்து மிருதுளா, சாரிகா, ஹேமாத்ரி ஆகியோர் பாடல் காட்சிகளில் தோன்றினார்கள். முனைவர் பார்வதி பாலசுப்பிரமணியன் பாடல்கள் பாடி நட்டுவாங்கம் செய்தார். அதிதி, சாய்நந்தினி, ஸ்ரீநிதி ஸ்ரீநாத் ஆகியோர் உடன் பாடினார்கள். திருநின்றவூர் பாண்டுரங்கன் எழுத்தில் தொகுத்திருந்தார். ராணிமேரி கல்லூரி இசைத்துறை தலைவர் பேராசிரியர் அபிராமசுந்தரியும் இந்த நாட்டிய நாடகத்திற்கு பங்களிப்பு செய்திருந்தார். முனைவர் உலகநாயகி பழனி தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சி நிறைவடைந்ததும் ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் நாட்டிய நாடகத்தில் பங்குபெற்றவர்களை சந்தித்தோம். நிகழ்ச்சியை நடத்திய முனைவர் பார்வதி பாலசுப்பிரமணியன் சொல்கிறார்:
“தமிழுக்கு கிரீடம் போன்றது திருக்குறள். மொழிகளை, நாடுகளை கடந்து மனித சமூகத்திற்கு மொத்தமாக பயன்படும் பொக்கிஷம் அது. முன்பு நாங்கள் வள்ளுவரும், வாசுகியும் பூமிக்கு வந்து மக்களுக்கு நல்ல பல கருத்துக்களை சொல்வதுபோன்ற நாட்டிய நிகழ்ச்சியை வடிவமைத்து நடத்தினோம். நடனம் என்கிறபோது அதை ஆழ்ந்து கவனிக்க வேண்டியதிருக்கிறது. அதனால் திருக்குறள் பெருமையை நாட்டிய நாடகமாக்கி மக்கள் மனதில் எளிதாக புரியவைக்க விரும்பினோம். பாடல் மற்றும் நடிப்பு மூலம் சொல்ல விரும்பிய கருத்தை மக்கள் மனதில் நன்றாக பதியவைத்திருக்கிறோம். வள்ளுவரின் வாழ்வியல் தத்துவங்களை நன்றாக புரிந்து மேடை ஏற்றவேண்டும் என்பதால் இதில் மாணவிகளை பயன்படுத்தினோம். திருக்குறள் கருத்துக்களை எளிதான பாடல்களாக்கி இசை அமைத்து மேடை ஏற்றுவதற்கு அதிக முயற்சியும், பயிற்சியும் தேவைப்பட்டது. நான்கு மாதங்கள் ஒத்திகையில் ஈடுபட்டோம். அதற்கு தமிழக அரசின் தமிழ்நாடு இசை நாடக மன்றம் வாய்ப்பளித்தது. மக்களிடம் இது நல்லமுறையில் போய் சேர்ந்திருக்கிறது” என்று மகிழ்ந்தார்.
என்ஜினீயரிங் இறுதி ஆண்டு பயிலும் மாணவி நிகிதா கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர். நடனத்தில் பங்கேற்ற அவர் சொல்கிறார்:
“கன்னடம் எனது தாய்மொழியாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பானிய மொழிகளும் எனக்கு தெரியும். அத்தனை மொழிகளில் எனக்கு பிடித்தது தமிழ்தான். அதன் சிறப்பை திருக்குறள் எடுத்துரைப்பதால், திருவள்ளுவரை கவுரவிக்கும் விதத்தில் முழுமையான பயிற்சிகள் பெற்று இந்த நாட்டிய நாடகத்தில் கலந்துகொண்டேன். இதன் பலனாக நிறைய குறள்கள் எனக்கு மனப்பாடமாகிவிட்டது. நிறைய தெரிந்தாலும், ஒரு சில குறள்களையாவது கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன். கல்லூரி மாணவிகளான நாங்கள் எப்போதும் அழகாக தோன்றவேண்டும் என்று விரும்புவோம். நவீன கால ஆபரணங்களையே அணிந்து வலம் வந்த நாங்கள் இந்த நாட்டிய நடனத்திற்காக பழைய கால ஆபரணங்களை உச்சி முதல் பாதம் வரை அணிந்திருந்தோம். அது எங்களுக்கு கூடுதல் அழகை தந்தது” என்றார்.
நாட்டிய நாடகத்தில் இடம்பெற்ற ‘குளோபல் பிசினஸ் அன்ட் பைனான்ஸ்’ துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி சுபாஷினியும், என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவி சந்தியாலட்சுமியும் நாலைந்து மொழிகள் தெரிந்தவர்கள். மேற்கத்திய நடனம், ப்ரிஸ்டைல் போன்ற கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கும் இவர்கள், “கலைகளில் சிறந்தது தமிழ் கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்த பரதநாட்டியம்தான். அது எங்கள் அழகு, ஆரோக்கியம், அறிவாற்றல் போன்றவைகளை மேம்படுத்துகிறது. அதனால் எங்கள் வாழ்க்கையில் நடனத்தையும் ஒன்றாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அதனோடு இணைந்த இந்த நாட்டிய நாடகம் எங்களுக்கு அதிக உற்சாகத்தை தந்தது. இதுபோன்ற நாட்டிய நாடகங்களில் பங்குகொள்வதன் மூலம் நாங்கள் எங்கள் கல்லூரியிலும் பிரபலமாகிவிட்டோம். உடல் ஆரோக்கியத்தோடு நினைவாற்றலும் மேம்படுவதால் கல்வியிலும் சிறந்து விளங்குகிறோம்” என்றவர்கள், விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை நடனத்திலே தொழுது நன்றியும் தெரிவித்தார்கள்.