குறிஞ்சிப்பாடி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி

குறிஞ்சிப்பாடி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-09-01 22:15 GMT

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சிபேட்டை பாட்டை வீதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ராஜேஷ்(வயது 27). என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் தம்பிப்பேட்டை சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

பெத்தநாயக்கன்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம்–கடலூர் சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென ராஜேசின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ராஜேசின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ராஜேசின் தந்தை ரவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்