கேளம்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வாலிபர்கள் பரிதாப சாவு

கேளம்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-08-31 23:37 GMT
திருப்போரூர், 

செங்கல்பட்டு வெள்ளம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 27). சிங்கப்பெருமாள்கோவில் பகுதியை சேர்ந்தவர் மோகன் (25). இருவரும் நண்பர்கள்.

திருப்போரூரை அடுத்த கோவளத்தில் ஒரு திருமணம் நிகழ்ச்சிக்காக இருவரும் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். கேளம்பாக்கம் அருகே தையூரில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வினோத், மோகன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் வினோத், மோகன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்