விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விழிப்புணர்வு ஊர்வலம்
விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இரு சக்கர வாகனத்தில் செல்லும் 2 பேரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு மாணவ-மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, மீண்டும் பள்ளிக்கூடத்தை வந்தடைந்தனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், பஞ்சவர்ணம், தாமரைசெல்வி, தரணியா, தலைமை ஆசிரியை ரோஸ்லிண்ட் சாந்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம்-சாயர்புரம்
ஓட்டப்பிடாரம் போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் தலைமை தாங்கினார். ஊர்வலமானது ஓட்டப்பிடாரம் தேரடி திடலில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, பாண்டியராஜன், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, போலீசார் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினர்.
இதேபோல் சாயர்புரம் போலீஸ் நிலையம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. சாயர்புரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பட்டாணி தொடங்கி வைத்தார். சாயர்புரம் பஜார் வழியாக முக்கிய வீதிகளில் சென்றது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் விமலா, சிவசண்முகம் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், போலீசார் கலந்து கொண்டனர்.