தாராபுரம் சட்டமன்ற தொகுதியை பொதுவானதாக மாற்ற வேண்டும், அமராவதி நதிநீர் பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் மனு

அமராவதி நதிநீர் பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் தாராபுரம் சட்டமன்ற தொகுதியை பொதுவானதாக மாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2018-08-31 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம், அமராவதி நதிநீர் பாசன பாதுகாப்பு இயக்க தலைவர் சின்னசாமி மற்றும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

தாராபுரம் சட்டமன்ற தொகுதி தனித்தொகுதியாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் எந்த விதமான தொழில்துறைகளோ, கல்வியில் முன்னேற்றமோ இல்லை. விவசாயிகள் நிறைந்த தாராபுரம் சட்டமன்ற தனித் தொகுதியை, பொதுத் தொகுதியாக மாறுதல் செய்து தருமாறு இந்த தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளோம். எனவே இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து தாராபுரம் சட்டமன்ற (தனி) தொகுதியை, பொதுத் தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்