பெட் காபி பற்பசை

‘பெட் காபி’ என்ற பெயரில் தூங்கி எழுந்ததும், பல் துலக்காமல் காபி குடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது.

Update: 2018-08-31 12:05 GMT
குறிப்பாக அமெரிக்கர்களை இந்த பழக்கம் வெகுவாக ஆட்கொண்டிருக்கிறதாம். அதற்காகவே அங்கு ‘பவர் எனர்ஜி’ என்ற பற்பசையை உருவாக்கி, சந்தைப்படுத்தியிருக்கிறார்கள்.

இது காபி கலந்த பற்பசையாம். ‘‘காலை எழுந்தவுடன் இந்த பற்பசை கொண்டு பல் துலக்கினால் காபி குடித்த திருப்தியும் கிடைக்கும், பற்களும் சுத்தமாகிவிடும். 50 சதவீத அமெரிக்கர்கள் பல் துலக்காமலேயே காபியை அருந்துகிறார்கள்.

சிலர் காபி குடித்த வேகத்தில் பல் துலக்கவும் மறந்துவிடுகிறார்கள். எல்லோரையும் பற்கள் மீது கவனம் செலுத்த வைப்பதற்காக காபி கலந்த பற்பசையை உருவாக்கினேன். வாயில் பற்பசை பட்டவுடன் காபி குடித்த புத்துணர்வு கிடைக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் பற்பசையைப் பயன் படுத்தலாம்’’ என்கிறார், இந்த பற்பசையை உருவாக்கிய டான் மெரொபோல்.


மேலும் செய்திகள்