சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.21 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் 850 போலி கைக்கெடிகாரங்களும் சிக்கின

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.21 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பண்டல்களையும், போலி கைக்கெடிகாரங் களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-08-30 22:30 GMT
மும்பை, 

மும்பை கிராபர்டு மார்க்கெட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.21 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பண்டல்களையும், போலி கைக்கெடிகாரங் களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலி கைக்கெடிகாரங்கள்

மும்பை கிராபர்டு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகள், பிரபல நிறுவனங்களின் போலி கைக்கெடிகாரங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் சம்பவத்தன்று கிராபர்டு மார்க்கெட்டில் உள்ள மனிஷ் வணிக வளாக கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது போலீசார் அட்லில் ஆஸ்பாக் பட்ரி என்பவரின் கடையில் இருந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களின் 850 போலி கைக்கெடிகாரங்களை பறிமுதல் செய்தனர்.

ரூ.21 லட்சம் சிகரெட் பண்டல்கள்

இதேபோல ராஜா ஹூசேன் என்பவரின் கடையில் நடத்திய சோதனையில், ரூ.21 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிகரெட்டுகள் துபாயில் இருந்து டெல்லி வழியாக மும்பைக்கு கடத்தப்பட்டவை ஆகும். இதையடுத்து அந்த சிகரெட் பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ராஜாஹூசேன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்