தூத்துக்குடி மாவட்டத்தில் 22 ஆயிரம் தாய்மார்களுக்கு குழந்தைகள் நல பரிசு பெட்டகம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரம் தாய்மார்களுக்கு குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2018-08-30 21:30 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரம் தாய்மார்களுக்கு குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.  

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் 16 செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல தாய்மார்கள் பயன்பெற்று உள்ளனர்.

தூத்துக்குடி வட்டத்தில் உள்ள 28 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 ஆயிரத்து 108 தாய்மார்களுக்கும், 7 நகர்ப்புற ஆரம்ப சுகதார நிலையங்களில் 91 தாய்மார்களுக்கும், 5 அரசு ஆஸ்பத்திரிகளில் 7 ஆயிரத்து 214 தாய்மார்களுக்கும், அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 6 ஆயிரத்து 739 தாய்மார்களுக்கும், கோவில்பட்டி வட்டத்தில் உள்ள 22 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,598 தாய்மார்களுக்கும், 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 தாய்மார்களுக்கும், 4 அரசு ஆஸ்பத்திரிகளில் 5 ஆயிரத்து 104 தாய்மார்களுக்கும், ஆக மொத்தம் 22 ஆயிரத்து 862 தாய்மார்களுக்கு 16 வகையான தரமான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்